கோவையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு கலெக்டர் மலர்தூவி மரியாதை
கோவையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு கலெக்டர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கோவை
அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பல்வேறு அமைப்பினர் அவரது உருவப்படத்திற்கும், உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்படி கோவை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு கலெக்டர் நாகராஜன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்பட அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். வடகோவையில் உள்ள அம்பேத்கரின் உருவப்படத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யு. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவஞானம், மதிவாணன், ஆறுச்சாமி, கனகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.