சிவகாசி,
சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் சித்துராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மனமகிழ்மன்றத்தின் பின் பகுதியில் உள்ள காலி இடத்தில் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 52), பாலமுருகன் (52), அமல்ராஜ் (44), மாரியப்பன் (58), செந்தூர்செல்வம் (47), முனியாண்டி மாரியப்பன் (42), திருப்பதிராஜா (38) ஆகிய 7 பேர் காசு வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.9500-யை பறிமுதல் செய்தனர்.