திருவையாறு ஐயாறப்பர் கோவில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்தனர்.

Update: 2021-04-14 19:44 GMT
திருவையாறு:-

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்தனர்.

ஐயாறப்பர் கோவில்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது 5 தேர்களின் வீதி உலா நடைபெறும். இதில் சுப்பிரமணியர் தேர் பழுதாகி விட்டது. 
இதையடுத்து பக்தர்கள் உதவியுடன் ரூ.31 லட்சம் செலவில் 11½ அடி உயரத்திலும் 8.9 அடி அகலத்திலும் புதிய தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டம் சித்திரை முதல்நாளான நேற்று நடந்தது. 

திரளான பக்தர்கள் 

ஐயாறப்பர் கோவில் கட்டளை விசாரனை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
தேர் 4 வீதிகளிலும் உலா வந்து சன்னதியை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் காசாளர் அகோரம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்