தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
பாவூர்சத்திரம்:
தென்காசி- கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைந்திடவும், விவசாயம் செழித்திடவும், கொரோனா கொடிய நோய் விலகி விடவும் வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர், சப்த கன்னியர்கள், அனைத்து தெய்வங்களுக்கும் அலங்கார தீபாராதனையும், அதேபோல் மலை உச்சியில் உள்ள பத்திரகாளி அம்மன், குகையில் உள்ள முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடந்தது.
கோவிலில் முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.