களக்காடு பகுதியில் 8 பேருக்கு கொரோனா

களக்காடு பகுதியில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2021-04-14 19:15 GMT
களக்காடு:

களக்காடு அருகே அ.தி.மு.க. பிரமுகர், அவருடைய மனைவி, 12 வயது மகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மேலும் களக்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண், 47 வயது பெண், 36 வயது ஆண், 49 வயது ஆண், கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் என மொத்தம் 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து களக்காடு பேரூராட்சி மற்றும் சுகாதார துறையினர், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்