கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டது

Update: 2021-04-14 19:05 GMT
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளில் உள்ள பகுதியில் கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு, இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் மெயின்ரோடு, தெருக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், கோவில்கள், பள்ளிக்கூடங்கள், தேவாலயம், மசூதி, பஸ் நிலையம், வங்கிகள், ஏ.டிஎம். மையங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், ஆஸ்பத்திரிகள், காய்கறி சந்தை ஆகிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சளி, இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரும் முக கவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு சோப்பு கொண்டு கை கழுவ வேண்டும் என ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தெருத்தெருவாக வீடுகளுக்கு சென்று சென்று பொதுமக்களிடம் கொரோனோ தொற்று விழிப்புணர்வு துண்டு பிரசாரம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்