அரியலூரில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-04-14 18:05 GMT
பெரம்பலூர், ஏப்.15-
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,988 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,807 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 132 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,356 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,300 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 34 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்