போலீசார் சார்பில் முககவசம் வழங்கல்
போலீசார் சார்பில் முககவசம் வழங்கினர்.
ஆண்டிமடம், ஏப்.15-
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பு அருகில் இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி, முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா தாக்குதலின் அபாயம் பற்றியும் எடுத்துக்கூறினர். இதையடுத்து அவர்களுக்கு கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய செய்து, இலவசமாக முககவசம் வழங்கி அணிய செய்தனர். மேலும் பொது இடங்களில் கூடும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினர்.