அம்பேத்கர் பிறந்தநாள் விழா- அரசியல் கட்சியினர் மரியாதை
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்க ளில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர், ஏப்.15-
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்க ளில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., பா.ஜ.க. சார்பில்...
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையிலும், பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பா.ம.க., வி.சி.க.
பா.ம.க. சார்பில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயலாளரும், மூத்த வக்கீலுமான காமராசு தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சி.எம்.சின்னசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
மலர்தூவி மரியாதை
மேலும் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அம்பேத்கர் இயக்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் சங்குப்பேட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு மட்டுமின்றி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகமும், எழுது பொருட்களும் வழங்கினர்.
ரத்ததான முகாம்
இதேபோல் மங்களமேடு அருகே உள்ள அகரம் சீகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அகரம் சீகூர் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றம், ெலப்பைகுடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். முகாமுக்கு முன்னாள் தலைமையாசிரியர் காமராஜ் தலைமை தாங்கினார். அகரம் சீகூர் ஊராட்சி மன்றத்தலைவர் முத்தமிழ்ச் செல்வன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடக்கி வைத்தனர். வேப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களிடமிருந்து 30 யூனிட் ரத்தம் கொடையாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மின்சார வாரிய இள மின் பொறியாளர் சுரேந்திரன் செய்திருந்தார்.
ஆண்டிமடம்
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி தலைமையில் வன்னியர் சங்கத்தினர், பா.ம.க. வினர் மாலை அணிவித்தனர். இதேபோல் வி.சி.க. சார்பாக ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராசா பிள்ளை ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் ஆண்டிமடம் அருகே ரெட்டித்தத்தூர் காமராஜர் நகரில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செபாஸ்டின் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உதவித் தலைமையாசிரியர் பங்கிராஸ் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சாலையின் இரு ஓரங்களிலும் புளி, புங்கன், பாதாம், நாவல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
அரியலூர்
இதேபோல் அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் சின்னதுரை தலைமையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருமானூர்
இதேபோல் திருமானூர் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க. சார்பில் பட்டியல் அணி மாவட்ட தலைவர் சங்கரன் தலைமையிலும், அ.ம.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் தலைமையிலும், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நகர செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சாமிதுரை தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சி சார்பில் அரியலூர் தொகுதி செயலாளர் கப்பல் குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட துணை பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையிலும், அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஐயப்பன் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட அமைப்பாளர் சின்னராஜா தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றியசெயலாளர் வெங்கடாசலம் தலைமையிலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.