சூரியன் நேர் உச்சியில் கடக்கும்போது பொருளின் நிழல் விழாத அதிசயம்

கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சூரியன் நேர் உச்சியில் கடக்கும்போது நிழல் விழாத அதிசயம் நிகழ்வை விளக்கி காண்பிக்கப்பட்டது.

Update: 2021-04-14 17:26 GMT
தேனி: 

தேனி மாவட்டம்  கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நேற்று சூரியன் நேர் உச்சியில் கடக்கும்போது நிழல் விழாத அதிசயம் நிகழ்வை விளக்கி காண்பிக்கப்பட்டது.

 இதற்காக திறந்த வெளியில் மேஜை மீது சில பொருட்கள் வைக்கப்பட்டன. நேற்று மதியம் 12.21 மணியில் இருந்து 12.23 மணி வரை சூரியன் நேர் உச்சியில் கடந்து சென்றபோது, பொருட்களின் நிழல் வெளிப்பக்கம் விழாத அதிசய நிகழ்வு ஏற்பட்டது. 

இதனை சிறுவர்கள், சிறுமிகள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.  

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தரிடம் கேட்டபோது, ஒவ்ெவாரு ஆண்டும் கம்பம் பகுதியில் இருமுறை சூரியன் செங்குத்தாக வரும்போது, அதன் ஒளிபடும் பொருளுடைய நிழல் தெரியாது.

 அதன்படி இந்த ஆண்டு சூரியன் நேர் உச்சியில் வரும்போது, அதன் ஒளிபடும் பொருட்களின் நிழல் விழாத நாட்களாக ஏப்ரல் 14 மற்றும் ஆகஸ்டு 28-ந்தேதி என்பது ஆய்வில் தெரியவந்தது. 

இதையடுத்து நேற்று நிழல் விழாத அதிசய நிகழ்வு காண்பிக்கப்பட்டது.. இதேபோல மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பகுதியும் அமைந்துள்ள இடத்திற்கேற்ப நிழல் விழாத நாட்கள் ஏற்படும். 

இதனை மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கான இடங்களில் விளக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

மேலும் செய்திகள்