பிளஸ்2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-04-14 16:22 GMT
தற்கொலை
கோவை

கோவை பீளமேட்டை அடுத்த வீரியம்பாளையம் கணேஷ் நகரை சேர்ந்தவர் ரங்கதுரை. இவரது மனைவி புனிதவள்ளி (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலராக  பணியாற்றி வருகிறார்.

 இவர்களுக்கு நித்தின்ராம் (16) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவதாக கூறப்படுகிறது. இதை தாய் புனிதவள்ளி கண்டித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் நித்தின்ராம் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த புனிதவள்ளி மகனை கண்டித்துள்ளார். 

அதன் பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து தனது மகனுக்கு புனிதவள்ளி போன் செய்தார். ஆனால் மகன் போனை எடுக்கவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு போன் செய்து தனது மகனை பார்க்க சொன்னார். 


அப்போது வீட்டுக்கு சென்று பார்த்தபோது நித்தின்ராம் வீட்டில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பீளமேடு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பீளமேடு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்