திருவாரூர் நகரில் கடந்த ஒரு மாதத்தில் 240 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு 8 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

திருவாரூர் நகரில் கடந்த ஒரு மாதத்தில் 240 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 8 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-14 14:20 GMT
திருவாரூர், 

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் நகரில் கடந்த ஒரு மாதத்தில் 229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. இதில் 159 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 81 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பகுதி

திருவாரூரில் வடக்கு வடம்போக்கி தெரு, ராஜா தெரு, வாசன் நகர் உள்பட 8 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தகர ஷீட்டுகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் நகரில் முககவசம் அணியாத 240 பேருக்கு ரூ.48 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்