செங்கல்பட்டு அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீட்டில் 22 பவுன் நகை திருட்டு

செங்கல்பட்டு அருகே காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீட்டில் 22 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2021-04-14 00:27 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பாலாறு 3-வது நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவின்குமார் (வயது 40). இவர் செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்து வருகிறார்.

பிரவின்குமாரின் மனைவி சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகி்றார். பிரவின்குமார் தனது மனைவியை பார்க்க சென்னை சென்றார்.

அப்போது மர்ம நபர்கள் பிரவின்குமார் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம், வெள்ளி பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த கேமராக்களை திருடி சென்று விட்டனர். பிரவின்குமார் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்