மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர், போக்சோவில் கைது

அறச்சலூரில் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-13 22:57 GMT
ஈரோடு
அறச்சலூரில் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
அறச்சலூர்
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியை சேர்ந்தவர் அன்புரோஸ் (வயது31).  இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். அந்த பகுதியில் 9-ம் வகுப்பு மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவி மட்டு்ம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட அன்புரோஸ் அடிக்கடி அங்கு சென்று, மாணவியை கட்டாயப்படுத்தி அவரிடம் தகாத உறவில் ஈடுபட்டு்ள்ளார். மேலும் அவரிடம் வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் வந்துள்ளார்.
இந்த நிலையில் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். இதில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்து மாணவியிடம் கேட்டு அறிந்தனர். பின்னர் இதுபற்றி மாணவி அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அன்புரோசை போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
பவானி பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவியை கடந்த 9-ந் தேதி காணவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தார். இந்த நிலையில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மகன் ராஜ்மோகன் (23) திருச்சிக்கு கடத்தி சென்றதும், பின்னர் அவர் அங்குள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி மாணவியை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் மாணவியுடன் பவானி புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த ராஜ்மோகனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து ராஜ்மோகனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர் வாலிபர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்