திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்

Update: 2021-04-13 21:38 GMT

மலைக்கோட்டை, ஏப்.14-
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள இ.பி.ேராடு அந்தோணியார் கோவில் தெரு ஆர்ச் பகுதியில் நேற்று காலை தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அவைத்தலைவர் அய்யப்பன் வரவேற்றார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர் சிங்கமுத்து நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்