தாரமங்கலம் அருகே நார்மில்லில் பயங்கர தீ

தாரமங்கலம் அருகே நார்மில்லில் பயங்கர தீ ஏற்பட்டது

Update: 2021-04-13 20:55 GMT
ஓமலூர்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் பகுதியில் நார்மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நார் பண்டல்களில் தீ பயங்கரமாக எரிந்து வருவதால் கூடுதலாக சேலம் சூரமங்கலம் தீயணைப்பு நிலைய வண்டியும் அங்கு சென்று உள்ளது. நார்மில்லில் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள். மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாரமங்கலம் போலீசார் அங்கு சென்று தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்