சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா: 2 நாட்களில் முதல் டோஸ் 14,674 பேர் போட்டுள்ளனர்

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் கடந்த 2 நாட்களில் 14 ஆயிரத்து 674 பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர்.

Update: 2021-04-13 20:46 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் கடந்த 2 நாட்களில் 14 ஆயிரத்து 674 பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை மேலும் வேகப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த 11-ந் தேதி முதல் இன்று (புதன்கிழமை) வரை தடுப்பூசி திருவிழா கடைபிடிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
14,674 பேர் முதல் டோஸ்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் 8,160 பேரும், நேற்று 6,514 பேரும் என கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 14 ஆயிரத்து 674 பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுள்ளனர். இதில் 45 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 8 ஆயிரத்து 860 பேர் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நேற்று முன்தினம் 8,068 பேரும், 11,309 பேரும் என மொத்தம் 19 ஆயிரத்து 377 பேர் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்