கார் மோதியதில் காவலாளி பலி

கார் மோதியதில் காவலாளி பலியானார்.

Update: 2021-04-13 20:45 GMT
கரூர்
கரூர் ராயனூர் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் முத்து சரவணன் (வயது 49). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சுமார் 11 மணி அளவில் திருமாநிலையூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று முத்து சரவணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து சரவணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் மற்றும் அதனை ஓட்டி சென்றவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்