தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
தர்மபுரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மாணவி பலாத்காரம்
தர்மபுரியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 19). டிப்ளமோ படித்த வாலிபரான இவர் அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்து வந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மகளை அருகே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்து அங்கு சென்ற தர்மராஜ் தன்னை காதலிக்குமாறு மாணவியை மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். மேலும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
வாலிபர் கைது
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தர்மராஜை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்து தர்மராஜை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.