கிருஷ்ணகிரி அருகே தடுப்பு சுவரில் வேன் மோதியதில் பழ மூட்டைகள் சாலையில் சிதறின.
கிருஷ்ணகிரி அருகே தடுப்பு சுவரில் வேன் மோதியதில் பழ மூட்டைகள் சாலையில் சிதறின.
கிருஷ்ணகிரி:
பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் பழங்களை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு வேன் சென்றது. கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி பக்கமாக சென்ற போது வேனின் முன்புற டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதியது. இதில் வேனில் இருந்த பழ மூட்டைகள் சாலையில் விழுந்து சிதறியது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து சரக்கு வேனை அப்புறப்படுத்தினர். பின்னர் சாலையில் விழுந்த பழ மூட்டைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.