கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறும் வாகன ஓட்டிகள் தொற்று பரவும் அபாயம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை வாகன ஓட்டிகள் மீறுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை வாகன ஓட்டிகள் மீறுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முககவசம் அணிய வேண்டும்
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சேலத்தில் தற்போது 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதித்து வருகின்றனர். சேலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தேவையின்றி பொதுமக்கள் வெளியில் செல்லக்கூடாது. அவசர தேவைக்காக வெளியில் சென்றால் முககவசம் அணிய வேண்டும். பஸ், ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பலர் இதை கடைபிடிப்பது இல்லை.
தொற்று பரவும் அபாயம்
அதற்கு உதாரணமாக நேற்று சேலத்தில் ஒரு ஆட்டோவில் அதிக பயணிகள் ஏற்றிச்செல்வதும் அதே போன்று மொபட்டில் சென்ற வாலிபர்கள், இளம் பெண்கள் முககவசம் அணியாமல் ஓட்டி செல்லும் காட்சியையும் பார்க்க முடிந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை வாகன ஓட்டிகள் மீறுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சேலம் மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்த கட்டுப்பாடுகளை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.