மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்தது
மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை தெற்கு தெருவை சேர்ந்த முத்தையா என்பவரது வீட்டின் தென்னைமரத்தில் மேல் பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீப்பிடித்தது.
மேலும் அருகில் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டில் மின்விசிறிகள், மின்விளக்குகள் சேதம் அடைந்தன.
இதுகுறித்து அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வந்த போது மீண்டும் மழை பெய்ததால் தென்னைமரத்தில் எரிந்து கொண்டிருந்த தீ தானாகவே அணைந்தது.