திருச்செங்கோட்டில் ரூ.7.50 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்
ரூ.7.50 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று பருத்தி, எள் ஏலம் நடைபெற்றது.
இதில், பி.டி.காட்டன் ரூ.5,842 முதல் ரூ.7,105 வரையில் ஏலம் விடப்பட்டது. 150 மூட்டைகள் ரூ.2.50 லட்சத்துக்கு ஏலம் போனது. இதேபோல் சிவப்பு எள் ரூ.86.90 முதல் ரூ.107.50 வரையிலும், வெள்ளை எள் ரூ.83.10 முதல் ரூ.107.50 வரையிலும், கருப்பு எள் ரூ.81 முதல் ரூ.106.70 வரையிலும் என 90 மூட்டைகள் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. பருத்தி, எள் மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கு ஏலம் போனது.