கூடுதல் கலெக்டர், நகரசபை ஆணையாளருக்கு கொரோனா
ராமநாதபுரத்தில் கூடுதல் கலெக்டர், நகரசபை ஆணையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் கூடுதல் கலெக்டர், நகரசபை ஆணையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது."
கொரோனா அதிகரிப்பு
மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் கட்டுக்குள்இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது வேகமாக உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அச்சம் ஏற்பட்டாலும் மக்களிடம் கவனக்குறைவு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்காமை போன்றவைதான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கடந்தமுறை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகுலுக்குதல் உள்ளிட்டவைகளை கடைப்பிடித்த மாவட்ட மக்கள் தற்போது கொரோனாவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறும் வகையில் சர்வசாதாரணமாக நடந்து கொள்வதை காண முடிகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை, நகராட்சி, காவல்துறை உள்ளிட்டவைகளின் மூலம் முககவசம் அணிவதை கடுமையாக பின்பற்ற அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் மக்களிடையே ஒத்துழைப்பு இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கூடுதல் கலெக்டருக்கு கொரோனா