ராமநாதபுரம்-சத்திரக்குடி இடையே-அதிநவீன எந்திரம் மூலம் தண்டவாளம் உறுதிப்படுத்தும் பணி மும்முரம்
ராமநாதபுரம் - சத்திரக்குடி இடையே ரெயில் தண்டவாளத்தை பிரித்து புதிதாக அதிநவீன எந்திரம் மூலம் வெல்டிங் வைத்து உறுதிப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் - சத்திரக்குடி இடையே ரெயில் தண்டவாளத்தை பிரித்து புதிதாக அதிநவீன எந்திரம் மூலம் வெல்டிங் வைத்து உறுதிப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பராமரிப்பு பணிகள்
இந்த இடைப்பட்ட காலத்தில் ரெயில் போக்குவரத்து நடைபெறாத நேரத்தில் ரெயில் தண்டவாளத்தை உறுதிப்படுத்தி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இதன்படி முதல்கட்டமாக திருச்சி-புதுக்கோட்டை இடையே 20 கிலோ மீட்டர் தூர பகுதியில் தண்டவாளத்தை முழுமையாக அகற்றி மீண்டும் பொருத்தி வெல்டிங் வைத்து ரெயில்கள் சென்றுவர வசதியாக உறுதிப்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பணி டிசம்பர் மாதம் முடிவடைந்துள்ளது.
ராமநாதபுரம்-சத்திரக்குடி
தரையிலும் தண்டவாளத்திலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எந்திரம் ரெயில் தண்டவாளத்தை பிரித்து மீண்டும் பொருத்தி தற்போதைய தேவைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப வெல்டிங் வைத்து உறுதி தன்மை உடையதாக மாற்றி வருகிறது. இந்த பணி மும்முரமாக நடக்கிறது. இன்னும் ஒரு வார காலத்தில் இந்த பணி முடிவடைய உள்ளதாக ரெயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
முழு வீச்சில் பணி
இதன் தொடர்ச்சியாக மதுரை வரை திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டதும் இந்த பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.