பொள்ளாச்சியில் 26 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி பகுதியில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
26 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி நகராட்சியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் கூளநாயக்கன்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, அம்மேகவுண்டனூர், கோமங்கலம்புதூர், ஊஞ்சவேலாம்பட்டி உள்பட ஒன்றிய பகுதியில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதை தவிர வடக்கு ஒன்றியத்தில் தமிழ்மணி நகர், குள்ளிசெட்டிபாளையம், போடிபாளையத்தில் 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கிருமி நாசினி மருந்து தெளிப்பு
பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையில் அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இதுவரை 87 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.