தூத்துக்குடி அருகே கட்டிட தொழிலாளி மீது தாக்குதல் 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி அருகே, கட்டிட தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் மாரிப்பாண்டி (வயது 23). கட்டிட தொழிலாளி. .இவரது அக்காள் முத்தையாபுரம் பகுதியில் வசித்து வருகிறார் இவரது அக்காவின் மூத்தமகள் 15 வயதுடைய பிளஸ்-1 மாணவி. அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜேசு என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்க சொல்லி மாரிப் பாண்டியிடம் அவரதுஅக்காள் கூறியுள்ளார். சம்பவத்தன்று மாரிப் பாண்டி அவரது அக்காவுடன் சேர்ந்து முத்தையாபுரம் பகுதியில் உள்ளஜேசுவின் வீட்டில் உள்ளவர்களிடம் இதுகுறித்து சொல்லி கண்டிக்க கூறியுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு மாரிப் பாண்டியும் அவரது அக்காவும் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் மாரிப்பாண்டியின்அக்கா மகள் தன்னால்தான் பிரச்சினை என நினைத்து வீட்டில் இருந்த பினாயிலை குடித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னர் மாரிப்பாண்டி கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றபோது ஜேசு (வயது 24) அஜித் (21) மற்றும் மாடன் (18) ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த மாரிப்பாண்டியும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜேசு, அஜித், மாடன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.