4 பேருக்கு கொரோனா
அவினாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் குடியிருக்கும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவினாசி
அவினாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் குடியிருக்கும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
அவினாசி பகுதியில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அனைவரும் முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அவினாசி பகுதி முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களிடமிருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் அவற்றை முறையாக கடைபிடிக்காததால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த
அவினாசி ராயம்பாளையம் நியூடவுன் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அந்த பகுதி முழுவதும் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் கிருமிநாசினி தெளித்து பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது. வெளிநபர்கள் அந்த பகுதிக்குள் வர தடைசெய்யப்பட்டுள்ளது.