தூத்துக்குடி சிப்காட் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி சிப்காட் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சிப்காட் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாநகராட்சி நகர் நல அலுவலர் வித்யா தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமை மாநகராட்சி நல அலுவலர் வித்யா தொடங்கி வைத்தார். முகாமில் சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
1365 பேர்
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மொத்தம் 53 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட 1365 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.முகாமில் சிப்காட் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் ஜோ பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.