ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு

ஆர்.கே.பேட்டை அருகே வாலிபர் ஏரியில் மூழ்கி பலியானார்.

Update: 2021-04-13 01:51 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே வங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் காளத்தீஸ்வரன். ஒன்றிய கவுன்சிலர். இவருடைய மகன் பாபு (வயது 22). பாபு நேற்று காலை வழக்கம்போல் பாபு சஞ்சீவிபுரம் பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றார். அப்போது கால்கள் இடரி தண்ணீரில் விழுந்தார். இவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

இதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திற்கு போலீசாருடன் விரைந்து சென்று ஏரியில் விழுந்த பாபுவை மீட்டு, சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்