டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி

சென்னையில் இருந்து கார் உதிரிப்பாகங்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை காட்டாங்கொளத்தூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது.

Update: 2021-04-13 01:21 GMT
பூந்தமல்லி, 

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மலையம்பாக்கம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சர்வீஸ் சாலையோரம் உள்ள மின்கம்பம் மீது மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. மின்கம்பத்தில் மோதிய அதே வேகத்தில் சாலையோரம் உள்ள கால்வாய் மீது ஏறிய கன்டெய்னர் லாரி அருகில் உள்ள வயல் வெளியில் கவிழ்ந்தது. இதில் கன்டெய்னர் லாரி டிரைவர் ராஜா படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வயல்வெளியில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்திய பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்