கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
திருவள்ளூரில் கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நகர், ஏ.கே.என்.அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 27). இவர் திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் கண் கண்ணாடி கடை வைத்து தொழில் செய்துவருகிறார்.
இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு அயத்தூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான 24 வயதுடைய பெண் ஒருவருடன் விக்னேஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு விக்னேஸ்வரன் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார்.
அதைத்தொடர்ந்து கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து பெண்ணின் கருவை விக்னேஸ்வரன் கலைத்து உள்ளார். ஒரு கட்டத்தில் விக்னேஸ்வரன் அப்பெண்ணை கைவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இது பற்றி அறிந்த பெண் நேற்று திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.