சாரல் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசியில் சாரல் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Update: 2021-04-12 21:13 GMT
சிவகாசி, 
சிவகாசியில் சாரல் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. 
சாரல் மழை 
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து காலை 11 மணிக்கு திடீரென லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை விட்டு, விட்டு பெய்தது. 
பொதுமக்கள் மகிழ்ச்சி 
இதனால் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது. 
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. 
பட்டாசு தொழிலாளர்களும், ஆலை நிர்வாகத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விட்டு, விட்டு பெய்த மழையால் உலர்த்தி வைக்கப்பட்ட பட்டாசுகள் மழையால் பாதிக்கப்பட்டது. 
இதமான காற்று 
இதைதொடர்ந்து பட்டாசு ஆலைகளுக்கு மதிய சாப்பாட்டு இடைவேளைக்கு பின்னர் விடுமுறை அளிக்கப்பட்டது. இரவு முழுவதும் இதமான காற்று வீசிக்கொண்டே இருந்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
சாத்தூர் 
அதேபோல சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, நேரம் செல்ல கன மழையாக பெய்தது. 
மேட்டமலை, இருக்கன்குடி, நென்மேனி, ஒ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், கண்மாய் சூரங்குடி, லட்சுமியாபுரம், பந்துவார்பட்டி ஆகிய பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த மழை நீர் வடிய வாருகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்