ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு கொரோனா சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆத்தூர்:
ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அ.தி.மு.க. வேட்பாளர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ெஜயசங்கரன் (வயது 51). இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். அவர் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து ஜெயசங்கரன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.