சிறுகனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: வாலிபர் சாவு; 2 பேர் படுகாயம்

சிறுகனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-04-12 20:22 GMT

சமயபுரம்,
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் வசிக்கும் செல்வராஜின் மகன் மருதுபாண்டி (வயது 19). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில், தனது தந்தையுடன் சிறுகளப்பூரில் இருந்து புள்ளம்பாடி நோக்கிசென்று கொண்டிருந்தார். 

வரகுப்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (23), கிழக்குத் தெருவைச் சேர்ந்த செந்தில்முருகன் (20) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மருதுபாண்டி, பிரசாந்த், செந்தில்முருகன் ஆகிய 3 பேரும் கீழேவிழுந்து படுகாயம் அடைந்தனர்.

 அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே மருதுபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

மற்ற இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தவிபத்து குறித்து சிறுகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்