ராணுவ கல்லூரியில் சேருவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ராணுவ கல்லூரியில் சேருவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-12 20:12 GMT
அரியலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாத பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 5-ந்தேதி நடத்தப்படவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 1.1.2009-க்கு முன்னதாகவும் 1.7.2010-க்கு பின்னதாகவும் பிறந்திருத்தல் கூடாது. வயது வரம்பில் தளர்வு கிடையாது. விண்ணப்ப படிவம் மற்றும் தகவலை இணையதளம் www.rimc.gov.in மூலம் பெற்றுக்கொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-600003 என்ற முகவரிக்கு நாளை மறுநாளுக்குள் (வியாழக்கிழமை) சென்று சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனரை 04329-221011 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்