200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை தாசில்தார் ரோசன் பேகம் தலைமையிலான குழுவினர், செங்கோட்டை பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சில மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் தாசில்தார் மூலம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.