உள்நோயாளிக்கு கொரோனா
திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக இருந்து வந்த 52 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
திருப்பத்தூர்,
பின்னர் அந்த அறைக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த அறை மூடப்பட்டது. உள்நோயாளிகள் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பெண் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
இதேபோன்று தேர்தலுக்காக சென்னையில் இருந்து திருப்பத்தூர் அருகே மணமேல்பட்டி கிராமத்திற்கு வந்த 2 பேருக்கும், திருப்பத்தூரில் 2 பேருக்கும், கொளுஞ்சிப்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.