தர்மபுரி அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் தற்கொலையா? போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-12 17:22 GMT
தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள கடகத்தூர் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் நேற்று உடல் துண்டான நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். 

அப்போது பிணமாக கிடந்தவர் சுமார் 28 வயது வாலிபர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து இறந்து கிடந்த வாலிபர் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 28) என தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் இருப்பது தெரியவந்தது. இவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்