குடிநீர் கேட்டு அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குடிநீர் கேட்டு அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அவினாசி
குடிநீர் கேட்டு அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
அவினாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு, பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வள்ளுவர் வீதிவளாகம் விநாயகர் கோவில் வீதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் கிடைக்காமல் அந்த பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைசேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சீரான குடிநீர் வழங்க வேண்டும்
அவினாசி பேரூராடசி வள்ளுவர் வீதி வளாகத்தில் விநாயகர் கோவில் வீதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு மாதம் இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் நாங்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திட் எடுத்துச் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே மற்ற பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்குவது போல் எங்கள் பகுதிக்கும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் உறுதி பொதுமக்களிடம் சமரசம் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.