கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மாநகருக்குள் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மாநகருக்குள் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-12 16:25 GMT
நல்லூர்
கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மாநகருக்குள் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள்
திருப்பூர் மாநகருக்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால் பழைய பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் தற்காலிக பஸ் நிலையம் தாராபுரம் ரோடு, கோவில் வழி அருகே செயல்பட்டு வருகிறது. தென் மாவட்டத்தில் இருந்து வரும் பஸ்கள் அங்கு நிறுத்தப்பட்டு சென்று வருகிறது.
கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாநகருக்கு செல்ல குறைந்த அளவே நகர பஸ்கள் இயக்கப்படுவதால் தாராபுரம், கொடுவாய், பொங்கலூர் அலங்கியம், பெல்லிகாளிபாளையம், பொன்நகர், கோவில்வழி, உள்ளிட்ட பகுதிகளால் இருந்து பஸ் மூலம் நகருக்கு வேலைக்கு சென்று வந்தனர். 
சாலை மறியல்
கோவில்வழியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டதால் தென்மாவட்ட பஸ்கள் நகருக்குள் முன்போல் செல்வதில்லை. இதனால் பல்வேறு பனியன் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு செல்ல தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மாநகர பஸ்கள் குறைந்த அளவில் கோவில்வழியில் இருந்து திருப்பூர் மாநகரத்திற்கு செல்வதால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று காலை 9 மணியளவில் 60-க்கும் மேற்பட்டோர் கோவில்வழி பஸ் நிலையம் முன்பு தாராபுரம் சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு அரை மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்