மணல் அள்ளிய 2 பேர் கைது

மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-12 15:58 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமையன்வலசை ஆற்று பகுதியில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று டிராக்டர், டிரைலர், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சடையன்வலசை சண்முகவேலு மகன் மாருதி (வயது30) மற்றும் கவியரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய சடையன்வலசை நடராஜன் மகன் கதிரேசன், சக்தி, அருண், அப்பாஸ், பாலமுருகன் ஆகியோரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்