சாத்தான்குளம் அருகே தம்பதியர் மீது தாக்குதல்
சாத்தான்குளம் அருகே தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சாத்தான்குளம்;
சாத்தான்குளம் அருகே புளியங்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (60). இவரது மனைவி ராமலட்சுமி (57). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த சுடலைமணி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன்கள் லிங்கத்துரை, சண்முகத்துரை ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ராமலட்சுமி, சுடலை மணிக்கு ஆதரவாக பேசினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த லிங்கத்துரை, சண்முகத்துரை ஆகியோர் ராமலட்சுமியையும், முருகேசனையும் கம்பால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த தம்பதியினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப்பதிவு செய்து லிங்கதுரை, சண்முகதுரையை தேடிவருகின்றனர்.