சாத்தான்குளம் அருகே காதலி குழந்தை பெற்ற நிலையிலும் திருமணம் செய்ய மறுப்பு காதலனுக்கு போலீசார் வலைவீச்சு

சாத்தான்குளம் அருகே, காதலி குழந்தை பெற்ற நிலையிலும் திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-04-12 12:00 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே, காதலி குழந்தை பெற்ற நிலையில் திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
காதல் ஜோடி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அன்னாள் நகரை சேர்ந்த மரியான் மகன் சகாயபிரான்சிஸ் வினோத் (வயது 24). இவரும், உறவினர் மகளான 22 வயது பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
காதலி கர்ப்பம்
இதில் காதலி கர்ப்பம் அடைந்துள்ளார்.  உடனடியாக தன்னை திருமணம் செய்யுமாறு காதலனிடம் காதலி கூறினார். 
ஆனால் காதலன் தட்டிக் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் காதலியை சந்திப்பதையும் அவர் தவிர்த்து வந்துள்ளார். 
இதனிடையே காதலி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழந்தையை பெற்றெடுத்தாள். இதன் பின்னரும் காதலியை வினோத் திருமணம் செய்ய மறுத்து விட்டாராம். அத்துடன் வினோத் தலைமறைவாகி விட்டாராம். 
காதலனுக்கு வலைவீச்சு
பாதிக்கப்பட்ட காதலி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சகாயபிரான்சிஸ் வினோத்தை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்