உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம்
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசையையொட்டி சந்திரசேகர், சவுந்தரவல்லி சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சேலம், கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, பூலாவரி, சூளைமேடு, அரியானூர், புத்தூர், வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, பாரப்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தரிசனம் செய்தனர்.