திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரம்
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் புதிய முனையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முனையம் அமைக்கும் பணி பல்வேறு கிரேன்களை கொண்டு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு(2022) அக்டோபர் மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய முனையத்திற்கு வாகனங்கள் வந்து செல்வதற்கு என கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள முனையத்தின் அருகில் புதுக்கோட்டை சாலையில் இருந்து புதிய முனையம் வரை இந்த சாலை பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது.