திருச்சியில் அரசு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறிய வணிக வளாகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
திருச்சியில் அரசு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறிய வணிக வளாகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சியில் அரசு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறிய
வணிக வளாகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
திருச்சி, ஏப்.12-
திருச்சியில் அரசு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறிய வணிக வளாகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு நெறிமுறைகள்
தமிழகத்தில் இரண்டாவது அலை பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு ஏப்ரல் 10-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பின்படி வணிக வளாகங்கள், திரையரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வணிக வளாகம்
ஆனால் திருச்சி- சென்னை பைபாஸ் சாலை அப்பலோ மருத்துவமனை அருகில் உள்ள டி-மார்ட் வணிக வளாகத்தில் அரசு விதிமுறைகளை மீறி ஏராளமான வாடிக்கையாளர்கள் கூடி நிற்பதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றும் புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் திருச்சி கிழக்கு தாசில்தார் குகன் நேற்று இரவு அங்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்.
ரூ.5 ஆயிரம் அபராதம்
அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக அபராத தொகை வசூல் செய்யப்பட்டது.