திருவாரூருக்கு விற்பனைக்கு வந்த பண்ருட்டி பலாப்பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

திருவாரூருக்கு விற்பனைக்கு வந்த பண்ருட்டி பலாப்பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Update: 2021-04-11 19:08 GMT
திருவாரூர்;
திருவாரூருக்கு விற்பனைக்கு வந்த பண்ருட்டி பலாப்பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 
பலாப்பழங்கள்
கோடை காலத்தில் சுவை மிகுந்த பலாப்பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். 
இந்த பலாப்பழங்கள் அதிகமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பயிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கு விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பண்ருட்டி பலாப்பழம் திருவாரூர் பகுதிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பழங்கள் மொத்தமாகவும், சில்லறையில் சுளைகளாகவும் விற்கப்படுகிறது.
வரவேற்பு
இந்த பழங்களை  மக்கள் ஆர்வத்துடன் வாங்கி ருசித்து வருகின்றனர். இது ஒரு பருவ நிலையில் கிடைக்கும் பழம் என்பதால் பலாப்பழங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. 
கொரோனா நோய் தொற்று கட்டுபாடு காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பலாம்பழம் விலை, விற்பனை சற்று மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
இதனால் தற்போது ஒரு  கிலோ பலாப்பழம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்