கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-11 18:51 GMT
ரிஷிவந்தியம், 

தருமபுரி மாவட்டம், கடத்தூரை சேர்ந்தவர் காந்தி மகன் யுவராஜ் (வயது 19). இவர் ரிஷிவந்தியம் அருகே சித்தேரிப்பட்டு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம்  தனது நண்பர்களுடன் அதே பகுதியை சேர்ந்த சேஷாத்திரி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் யுவராஜ் குளிக்க சென்றார். 
அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கினார். இதைபார்த்த நண்பர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி யுவராஜை மீட்டு கரைக்கு கொண்டு வந்துபார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து இருந்தது தெரிந்தது. 

போலீசார் விசாரணை

அப்போதுஅங்கிருந்த உறவினர்கள் யுவராஜி்ன்  உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்