புதுக்கோட்டையில் போதை ஊசி விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

புதுக்கோட்டையில் போதை ஊசி விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2021-04-11 18:42 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் போதை ஊசி விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுக்கோட்டை டவுன் பகுதியில் சமீபத்தில் போதை ஊசி விற்ற பெரியார்நகரை சேர்ந்த பாண்டி (வயது 25), சத்தியமூர்த்தி நகர் விக்னேஷ் (23), பூங்கா நகர் பாஸ்கர் (34), அச்சுதன் (34) ஆகிய 4 பேர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் கைதானவர்களில் பாண்டி, விக்னேஷ், பாஸ்கர், அச்சுதன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்படி 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேரிடம் அதற்கான நகலில் கையெழுத்து வாங்கிய பின் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்